காந்திமியூசியம் அருகே பெண்ணிடம் பணம், செல்போன் பறிப்பு: போலீஸார் விசாரணை
மதுரையில் நடைபெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்;
காந்திமியூசியம் அருகே பெண்ணிடம் பணம், செல்போன் பறிப்பு:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் மனைவி தமிழ்மொழி (30.). இவர் மதுரை காந்தி மியூசியம் அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது, பைக்கில் சென்ற மூன்று நபர்கள் அவரிடமிருந்த பையை பறித்துச் சென்றனர். அந்தப் பையில், செல்போன் ஒன்றும், ரூபாய் மூன்றாயிரமும் வைத்திருந்தார். இந்த வழிப்பறி குறித்து, தமிழ்மொழி, தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து பைக்கில் வந்த நபர்களை தேடி வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் வீடு புகுந்து நகைபணம் திருட்டு:
திருப்பரங்குன்றம் கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் சிவகிருஷ்ணன் மனைவி காயத்திரி(29.). இவர் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தார்.அந்த நேரத்தில் வீடு புகுந்த மர்ம நபர் வீட்டில் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த தங்கமோதிரம் ஒன்று,வெள்ளி நகைகள், பணம் ரூபாய் மூன்றாயிரத்து ஐநூறு முதலியவற்றை திருடிச் சென்று விட்டனர்.இந்த திருட்டு குறித்து காயத்திரி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
தெப்பக்குளம் பகுதியில் தையல் கம்பெனியை உடைத்து பணம் திருட்டு:
இளையான்குடி காளடிதிடல் என்ற ஊரைச் சேர்ந்தவர் சண்முகம்(35.). இவர் தெப்பக்குளம் புதுராம்நாட் ரோட்டில் துணிகளுக்கு எம்பிராய்டரி டிசைன் செய்யும் தையல் கம்பெனி நடத்தி வருகிறார்.சம்பவத்தன்று இரவு மர்ம நபர் இந்த கம்பெனியின் ஷட்டர் கதவை உடைத்து உள்ளே சென்ற அவர், அங்கு வைத்திருந்த ரொக்கப் பணம் ரூபாய் ஆறாயிரத்து ஐநூறை திருடிச் சென்று விட்டார். இந்த திருட்டு குறித்து உரிமையாளர் சண்முகம் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடிவருகின்றனர்.
மதுரை தலைமை தபால் நிலையத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: ஆண் ஊழியர் கைது:
மதுரை பசுமலை புது அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பத்மநாபன்( 59 ).இவர் தலைமை தபால் அலுவலகத்திற்கு எம்டிஎஸ் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இதே அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரை அவர் ஆபாசமாக பேசி கடந்த சில நாட்களாக செக்ஸ் டார்ச்சர் செய்தாராம். அந்த பெண் ஊழியர் பலமுறை அவரை எச்சரித்தும் கேட்கவில்லை என கூறப்படுகிறது. அவர் தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளார் .இதனால் மனமுடைந்த அந்த பெண் ஊழியர், தனக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து அவர் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் பத்மநாபன்( 59 ) என்பவரை கைது செய்தனர்.