மதுரையில் நகர்புற உள்ளாட்சி தேர்தல்: அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனை
மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகளை குறித்த ஆய்வு செய்யப்பட்டது;
மதுரையில் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம்
மதுரையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில் மதுரை மாவட்டத்துக் கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் ஏ.கே.கமல் கிஷோர், முன்னிலையில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகளை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் உயர் அதிகாரிகள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.