ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த இரண்டு பேர் கைது
மதுரையில் நடந்த பல்வேறு சம்பவங்களில் 4 பேர் உ.யிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்;
திருப்பரங்குன்றம் கண்மாயில் மூழ்கி ஒருவர் பலி: போலீஸார் விசாரணை:
மதுரை திருப்பரங்குன்றம் கண்மாயில் அடையாளம் தெரியாத நபர் மூழ்கியது குறித்து தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் விஏஓ மனோஜ் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவரின் உடலை மீட்டனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? கோயிலுக்கு வந்த பக்தரா? அல்லது திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவரா ?தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது குளிக்கச்சென்றபோது இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்ச் சங்கம் ரோட்டில் ஹோட்டல் தொழிலாளி வலிப்பு நோய் வந்து பலி:
மதுரை மணி நகரம் மேல தெருவை சேர்ந்தவர் முருக பாண்டி 50.இவர் தமிழ் சங்கம் ரோட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார் .இந்த நிலையில் அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று அவருக்கு வலிப்பு நோய் வந்தது. கால் கைகள் உதறி நிலையில் மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய அம்மா மாரியம்மாள் திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஹோட்டல் தொழிலாளி முருகபாண்டியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ரயிலார் நகர் பொதிகை நகரைச் சேர்ந்த மாணவி பிளஸ் டூ படித்து வந்தார். நடந்து கொண்டிருக்கும் பொதுத் தேர்வில் கலந்து கொண்டு எழுதி வந்தார். இந்த நிலையில் இதுவரை எழுதிய தேர்வு சரியாக எழுதவில்லை என்று கூறியுள்ளார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய தந்தை கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிளஸ் டூ மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா நகரில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை:
மதுரை அண்ணாநகர் கோமதிபுரம் வித்தகர் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் பேபிபாலசுப்பிரமணி(26.)இவர் சில நாட்களாக மன அழுத்த்தில் இருந்து வந்தார்.இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது கைலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அவரது அம்மா பிச்சைப்பாண்டி அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து வாலிபர் பேபிபாலசுப்பிரமணியின் தற்கொலைக்கான காரணம்குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்லூரில் ஆன்லைன் லாட்டரி விற்பனை: இரண்டு பேர் கைது:
மதுரை கோரிப்பாளையம் ஜம்புராபுரம் மார்க்கெட்டில் மருத்துவமனை அருகே ஆன்லைனில் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக செல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்தனர். அவர்களிடம் விசாரித்த போது செல்லூர் மீனாட்சிபுரம் ஜீவா தெரு காமராஜ்( 57,) செல்லூர் சுயராஜபுரம் நான்காவதுதெரு கிருஷ்ணன்(47 )என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து பைக் ஒன்று. இரண்டு செல்போன்கள் ஏடிஎம் கார்டு பணம் ரூபாய் நான்காயிரத்து எழுப்தைந்து முதலியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
மதுரையில் கஞ்சா விற்பனை: பெண் உட்பட இரண்டு பேர் கைது:
மதுரை காமராஜர் புரம் இந்திரா நகர் வடக்கு தெரு கீழ் மதுரை ரோட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக கீரைத்துரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். பின்னர் அங்கு கஞ்சா விறபனை செய்த காமராஜர் புரம் இந்திரா நகர் அண்ணா மேல தெருவை சேர்ந்த கணேஷ் மகன் பிரேம்குமார்( 22 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் .
அனுப்பானடியில் பெண் கைது: மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில் அனுப்பானடி பஸ் ஸ்டாண்ட் அருகே கஞ்சா விற்பனை செய்த விரகனூர் சுந்தர்ராஜபுரம் ரகுராமன் மனைவி பஞ்சு(42)என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.