மதுரை மத்திய சிறையில் இரண்டு கைதிகள் இறப்பு: போலீஸார் விசாரணை
மதுரை மத்திய சிறையில் ஒரே நாளில் இரண்டு தண்டனை சிறைவாசிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்;
மதுரை மத்திய சிறையில் ஒரே நாளில் இரண்டு தண்டனை சிறைவாசிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதுரை மத்திய சிறையில், ஆயுள் தண்டனை கைதியாக சிறைவாசம் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியைச் சேர்ந்த தர்மர் ( 52). இன்று பிற்பகலில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட தாக சிறை வளாகத்தில் உள்ள சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மேல் சிகிச்சைக்காக சிறை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த தர்மரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மதுரை மத்திய சிறையில் தண்டனை சிறைவாசியாக இருந்த தேனியை சேர்ந்த அஜித்குமார்( 29 ) என்ற இளைஞர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள் ளார். கொலை உள்ளிட்ட வழக்குகளில் தண்டனை பெற்று கடந்த 2022 ஏப்ரல் முதல் சிறையில் உள்ளார். கடந்த ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இவர் மீது மேலும் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், கைதி அறைக்குள் ளேயே இன்று காலை வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள தாகவும் சிறைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து, கரிமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.