மதுரை அரசுமருத்துவமனையில் ஊழியர்கள் இருவர் பணி நீக்கம்: டீன் நடவடிக்கை

தனியார் மருத்துவமனையுடன் இணைந்து பணத்திற்காக ஒப்பந்த ஊழியர்கள் புரோக்கர்களாக செயல்பட்டது விசாரணையில் உறுதியானது;

Update: 2021-12-10 08:45 GMT

அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளை பிரபல தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி புரோக்கர்களாக செயல்பட்ட இரண்டு பேரை பணிநீக்கம் செய்து டீன் ரத்தினவேல்  நடவடிக்கை எடுத்துள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளை அரசு மருத்துவமனையை விட மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிறப்பாக சிகிச்சை கிடைக்கும் என மூளைச்சலவை செய்து , தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு பல ஆண்டுகளாக புற்று நோயாளிகளை அனுப்பி வைத்த மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்ட வார்டு மேலாளர் சார்லஸ் மற்றும் லேப் டெக்னீசியன் அருணா ஆகிய இரண்டு ஒப்பந்த ஊழியர்களை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேல் பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், மதுரையின் பிரபல தனியார் மருத்துவமனைக்கு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் அனுப்பி முறைகேடு நடந்து இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னையிலிருந்து மருத்துவ குழு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டது. அந்தக் குழுவின் விசாரணை அடிப்படையில், முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையுடன் இணைந்து பணத்திற்காக ஒப்பந்த ஊழியர்கள் புரோக்கர்களாக செயல்பட்டது விசாரணையில் உறுதியானதால்,  இருவரையும் பணிநீக்கம் செய்து  டீன் நடவடிக்கை எடுத்தார்.

அரசு மருத்துவமனைக்கு வரும் புற்று நோயாளிகளை தங்களது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவரின் பிரபல தனியார் மருத்துவமனை என்பதும் , அது தொடர்பாகவும் துறைரீதியான விசாரணை நடைபெற்று வருகின்றது.

Tags:    

Similar News