மதுரையில் கழிவுநீர்த்தொட்டியில் விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் பலி

மதுரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யச் சென்ற 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.;

Update: 2022-04-22 08:30 GMT

மதுரை பழங்காநத்தம் அருகே நேதாஜி நகர் பகுதியில் கழிவுநீர் தொட்டிக்குள் மோட்டார் பழுது பார்க்க சென்ற போது சிக்கி தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைைப்புத்துறையினர்

மதுரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யச் சென்ற 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

மதுரை பழங்காநத்தம் அருகே நேதாஜி நகர் பகுதியில் கழிவுநீர் தொட்டிக்குள் மோட்டார் பழுது பார்க்க சென்ற போது சிவக்குமார் என்பவர் தவறி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார் உடனடியாக அவரை காப்பாற்ற சென்ற சக தொழிலாளர்கள் லட்சுமணன்,சரவணன் ஆகியோரும் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்ததில் மூவரும்  உயிரிழந்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மதுரை டவுன் தீயணைப்பு படை வீரர்கள்  கழிவுநீர் தொட்டியில் இருந்து மூன்று பேரின் சடலங்களை  மீட்டு உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், துணை மேயர் நாகராஜன்,காவல் துணை ஆணையர் தங்கதுரை மற்றும் எஸ்‌‌எஸ்.காலணி காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். கழிவுநீர்த் தொட்டிகளில், வடிகால் பணித் தளங்களில் வெளிப்படும் மீத்தேன், கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் சல்பைட் ஆகிய வாயுவை மனிதர்களின் நுகர்வு சக்தியைக் கொண்டு கண்டறிய முடியாது. ஏனென்றால், இந்த வாயு நுகர்வு உணர்வு நரம்புகளை உடனே பாதித்துவிடும். இதனால், மணமில்லை என்று உள்ளே இறங்கி விடுகிறார்கள் அதிக அளவு வெளிப்பட்டால் உயிரை இழக்க நேரிடும் ஆகையால் வருங்காலங்களில் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படாமல் அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News