மதுரையில் நடந்த பல்வேறு சம்பவங்களில் மூன்று பேர் மரணம்

மதுரை மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர்;

Update: 2023-01-08 11:15 GMT

பைல் படம்

மதுரையில் வெவ்வேறு  இடங்களில் நேரிட்ட  விபத்துகளில் பெண் உள்பட மூன்று பேர் பலி

வாடிப்பட்டி தாலுகா வாவிட மருதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் ராமசாமி( 24.) இவர் புது நத்தம் ரோடு நாராயணபுரம் அருகே பைக் ஓட்டிச் சென்றார். அவர் அங்குள்ள பள்ளி ஒன்றின் முன்பாக சென்றபோது அந்தவழியாகச் சென்ற அரசு பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராமசாமியை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் செல்லும் வழியிலேயே அவர்  உயிரிழந்தார் .இந்த விபத்து குறித்து ராமசாமியின் தந்தை மணிகண்டன் கொடுத்த புகாரில் அரசு பஸ் டிரைவர் உசிலம்பட்டி தாலுகா உத்தப்ப நாயக்கனூரை சேர்ந்த செல்வம்(47 )என்பவர் மீது போக்குவரத்துப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழைய குயவர் பாளையம் ரோட்டில் விபத்து சைக்கிளில் சென்றவர் பலி

முனிச்சாலை கரிஷ்மா பள்ளிவாசல் தெரு மூன்றாவது தெருவை சேர்ந்தவர் அன்வர் பாட்ஷா(67).. இவர் பழையகுயவர்பாளையம் ரோட்டில் சைக்கிள் ஓட்டிச் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற தனியார் பஸ் மோதி விபத்தானது. இந்த விபத்தில் அன்வர் பாஷா சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்து போக்குவரத்துபுலனாய்வுபிரிவு போலீசார் ஈரோடு சாத்தமங்கலம் கொடிப்புரம் தளவாடியைச் சேர்ந்த ரங்கராஜு 45 என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகமலை புதுக்கோட்டையில் நேரிட்ட சாலை விபத்தில் பெண் பலி

அச்சம்பத்து தேனி மெயின் ரோட்டை சேர்ந்தவர் பானுமதி(55.). இவர் மதுரை தேனி மெயின்ரோட்டில் சாலையை கடந்து சென்றார். அப்போது திருமங்கலம் கரடிக்கள் விஜிபி நகரை சேர்ந்த மோகன் மகன் விஷ்வா என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி விபத்தானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பானுமதியை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் .இந்த விபத்துகுறித்து தம்பி சந்திரசேகர் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த பயணிகளிடம் செல்போன்கள் திருட்டு

மதுரை  ஷேர் ஆய்டோவில் பயணம் செய்த பயணியிடம் வெவ்வேறு சம்பவங்களில் செல்போன்கள் திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.பரமக்குடி அக்ரகாரத்தை சேர்ந்தவர் மஞ்சுளா(40.) இவர் மதுரையில் இஸ்மாயில் புரம் ஆறாவது தெரு வரை ஷேர் ஆட்டோவில் சென்றார். இறங்கி பார்த்தபோது அவர் வைத்திருந்த செல்போனை சக பயணி திருடியது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார்.

கூடல்நகர் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் பத்மநாபராஜ்( 53 ). இவர் கீழவெளி வீதியில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு சேர் ஆட்டோவில் சென்றார். கடையின் முன்பாக இறங்கி பார்த்தபோது அவரிடம் இருந்து செல்போன் திருடு போயிருந்தது. சக பயணி திருடியது தெரியவந்தது. இந்த இரண்டு திருட்டுகள் குறித்தும் விளக்கத்தூண் போலீசில் புகார்செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு நபர்களிடமும் செல் திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.

ஆழ்வார்புரத்தில் கத்தி முனையில் ரூ 2ஆயிரம் வழிப்பறி: மூன்று வாலிபர்கள் கைது

மதுரை ஆழ்வார்புரத்தில் ஜவுளிக்கடை முன்பாக கத்தி முனையில் ரூ 2ஆயிரம் வழிப்பறி செய்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.திருப்பரங்குன்றம் நடுத்தெரு அழகர் மகன் தினேஷ்(29 ).இவர் ஆழ்வார் புரத்தில் ஜவுளிக்கடை முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது மூன்று வாலிபர்கள் அவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி அவரிடமிருந்து ரூ2ஆயிரத்தை வழிப்பறிசெய்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து தினேஷ் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட ஜெயமுருகன் என்ற ஜாம், சுபகிருஷ்ணன், பழனி குமார் ஆகிய மூன்று வாலிபர்களை கைது செய்தனர்.

திருமங்கலத்தில் திடீர் காய்ச்சலுக்கு இரண்டு மாத பெண் குழந்தை பலி

மதுரை  திருமங்கலம் அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவருடைய இரண்டு மாத பெண் குழந்தை காமிகா ஸ்ரீ .இவர் வீட்டில் இருந்தபோது திடீரென்று காய்ச்சல் அதிகமானது. அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் செல்லும் வழி யிலேயே குழந்தை காமிகா ஸ்ரீ  உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தாய் அபிராமி திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News