தேனி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணசாமி சுவாமி தரிசனம்
தேனி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணசாமி மஞ்சமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.;
தமிழகத்தில் நடைபெற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் இரண்டு கட்டமாக வெளியிடப்பட்டு உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த பட்டியலை வெளியிட்டார்.
அந்த பட்டியலின்படி தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் நாராயணசாமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது, வேட்பாளர் நாராயணசாமி மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மஞ்சமலை சுவாமி கோவிலிற்கு அதிமுக கட்சி தொண்டர்களுடன் கோவில் மலை பாதையில் நடந்தே சென்று சாமி தரிசனம் செய்தார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்பி ,ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர்கள் அழகு ராசா, குமார் , புதுப்பட்டி உமேஷ். வலையபட்டி மனோகான் ஒன்றிய, நகர, கிளை சார்பு அணி, மகளிர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள், முன்னிலையில் பிரச்சாரத்தை தொடங்கினார்.
இதனை தொடர்ந்து வேட்பாளர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் இரட்டை இலை சின்னத்திற்கு கடுமையாக உழைத்து வெற்றி பெறுவோம். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் வெற்றியை சமர்பிப்போம்.
இவ்வாறு, அவர் கூறினார்.