வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த கார் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மதுரையில் வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த காரைத் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை காமராஜர் சாலை கிருஷ்ணாபுரம் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சேது ராவ் 57. இவருக்கு சொந்தமான காரை வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்தார். அதிகாலை எழுந்து பார்த்த போது, காரை நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இந்த திருட்டு தொடர்பாக சேதுராவ், விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து கார் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.