மதுரையில் வெவ்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 பைக்குகள் திருட்டு
மதுரையில் வெவ்வேறு இடங்களில் மூன்று பைக்குகள் திருட்டு
மதுரையில், வெவ்வேறு இடங்களில் நிறுத்தியிருந்த மூன்று பைக்குகள் திருடப்பட்டது தொடர்பாக திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர். வில்லாபுரம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(35.) இவர் மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு உறவினரை பார்க்க சென்றிருந்தார். அவர் உள்ளே சென்று திரும்பி வந்த போது, மருத்துவமனைக்கு எதிராக நிறுத்தி இருந்த அவரது பைக் திருடு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக, சதீஷ்குமார் மாட்டுத்தாவனி போலீசில் புகார் செய்துள்ளார். இதை போல, ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் யோகராஜன்(23.) இவர் செல்லூர் பூந்தமல்லி நகரில் தனக்கு சொந்தமான ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள பைக்கை நிறுத்தி இருந்தார். பின்னர் வந்து பார்த்தபோது அந்த பைக் திருடப்பட்டிருந்தது.
யோகராஜா அளித்த புகாரில் செல்லூர். போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தெற்குவெளிவீதி பந்தடி குறுக்கு தெருவை சேர்ந்தவர் சிவநாதன்( 58.) இவர் இவருக்கு சொந்தமான ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பைக்கை வீட்டு வாசல் முன்பாக நிறுத்தி இருந்தார். அந்த பைக்கும் திருடு போய்விட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிவநாத், தெற்குவாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டுகளில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.