மதுரையில் தனியார் நிறுவனத்தில் திருட்டு: ஊழியர் கைது

தனியார் நிதி நிறுவனத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில், ஈடுபட்டதாக அந்நிறுவனத்தின் ஊழியர் கைது.;

Update: 2022-04-03 14:41 GMT

தனியார் நிதி நிறுவனத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில், ஈடுபட்டதாக அந்நிறுவனத்தின் ஊழியர் கைது.

மதுரை மாநகர் திலகர் திடல் காவல் எல்லைக்குட்பட்ட மணிநகரத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் கடந்த 19 -ஆம் தேதி அன்று ரூ.11,37,500 மதிப்புள்ள 505.5 கிராம் எடையுள்ள தங்க நகைகள் திருடு போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவத்தில், ஈடுபட்டவரை போலீசார் தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில், போலீசார் விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அதே நிதி நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்த காளிதாஸ், (வயது 33) என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அவரை கைது செய்த போலீசார் மேலும், திருடுபோன நகைகளையும் மீட்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

Tags:    

Similar News