மதுரையில் தெருவில் குளம் போல தேங்கிய கழிவு நீர் அகற்றப்படுமா?

Update: 2023-09-12 06:00 GMT

மதுரை  அண்ணாநகர் தாசில்தார் நகரில் குளம் போல தேங்கியுள்ள கழிவு நீர்

சாலையில் கழிவுநீர் தேங்குவது  தடுக்கப்பட வேண்டுமெனமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரை அண்ணா நகர், தாசில்தார்நகர், காதர் மொய்தீன் தெருவில் பல மாதங்களாக சாலையில் கழிவுநீர் பொங்கி, குளம் போல தேங்கியுள்ளது. மதுரை அண்ணா நகர் தாசில் நகரில் பல இடங்களில், கழிவுநீர் ஆனது சாலைகளில் குளம் போல தேங்கியுள்ளது. காதர் மைதீன் தெரு, வீரவாஞ்சி தெரு, அன்பு மலர் தெரு, ராஜராஜன் தெரு உள்ளிட்டு தெருக்களில், கழிவுநீர் வாய்க்காலில் நீர் பெருக்கெடுத்து, சாலையிலே குளம்போல தேங்கி, கொசு உற்பத்தியை ஏற்படுத்தும் மையமாக திகழ்கிறது.

இது குறித்து, இப்பகுதியில் குடியிருப்போர், மதுரை மாநகராட்சி அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும், மதுரை தாசில்தார் நகர் காதர் மொய்தீன் தெருவில் தேங்கியுள்ள கழிவு நீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், வீரவாஞ்சி தெருவில், பல இடங்களில் கழிவுநீர்கள் சாலையிலே பொங்கி துர்நாற்றத்தை  ஏற்படுத்துகிறது. இதனால், சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர், இரவு நேரங்களில் தடுமாறி கீழே விழுகிற நிலை ஏற்படுகிறது.

மேலும், மழைக்காலங்களில் மருது பாண்டியர் தெருவில் ரைஸ் மில் அருகே நீரானது செல்ல வழி இல்லாமல் குளம் போல தேங்கியுள்ளன. ஆகவே ,மதுரை மாநகராட்சி ஆணையாளர், மேயர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இப்பகுதி குடியிருப்போர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News