மதுரையில் ஆழ்துளை கிணறு, குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்த மாநகராட்சி மேயர்

மதுரையில் ஆழ்துளை கிணறு, குடிநீர் தொட்டிகளை மாநகராட்சி மேயர் இந்திாணி பொன் வசந்த் திறந்து வைத்தார்.

Update: 2023-11-08 10:45 GMT

மதுரையில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகளை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் திறந்து வைத்தார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.57க்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த் , பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.57-ல் பாரதியார் மெயின் ரோடு பகுதியில் ரூ.4.95 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆழ்துளை கிணறு, கிருஷ்ணாபாளையம் 2வது தெருவில் ரூ.4.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆழ்துளை கிணறு பிள்ளைமார் தெரு மந்தை (மறவர் தெரு)யில் ரூ.4.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு, மடத்து கோவில் தெருவில் ரூ.4.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு, வேளாளர் தெருவில் ரூ.4.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு என, ரூ.24.55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஐந்து ஆழ்துளை கிணறுகள் மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மேலும்  ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வைகை காலனியில் ரூ.4.95 மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள தடுப்பு சுவர்கள் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வைகை காலனி எதிரில் உள்ள மாநகராட்சி நுண்ணுயிர் உரக்கூடம் பின்பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள நியாய விலைக் கடை அமைப்பதற்கான பூமி பூஜை , மேயரால், தொடங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து, தானப்பமுதலி தெருவில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற வீடற்ற ஏழைகள் இல்லத்தில் வசிக்கும் ஏழை எளிய முதியவர்களுக்கு தீபாவளி புத்தாடைகளை, மேயர், வழங்கினார்.

இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி, உதவி ஆணையாளர்சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) கனி, சுகாதார ஆய்வாளர்கள் கவிதா, செல்வகுமார், மாமன்ற உறுப்பினர் விஜயலெட்சுமி, மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News