மதுரை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள்: மேயர் வழங்கல்
Textbooks for Madurai Corporation High School Students;
மதுரை மாநகராட்சி வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார்.
மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை, மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோர் வழங்கினார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி கடந்த 13.06.2022 முதல் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் அனைத்து பள்ளிகளின் வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள், விளையாட்டு மைதானங்கள், பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட இதரப்பகுதிகள் அனைத்து தூய்மைப்படுத்தும்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் உத்தரவின்படி, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. முதல் இரண்டு நாட்களுக்கு அனைத்து மாணவ, மாணவிகளுக்கு புத்தாக்கப்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
அதன்படி, மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் 222 மாணவிகளுக்கு தமிழக அரசின் பாடப் புத்தகங்களை, மேயர், ஆணையாளர், வழங்கினார்கள். தொடர்ந்து ,வகுப்பறை மற்றும் அறிவியல் ஆய்வுக்கூடத்தை பார்வையிட்டு, அறிவியல் விளக்க சாதனங்களின் செயல்பாட்டை மாணவிகளுடன் கேட்டறிந்தார். மேலும், மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக கலந்துரையாடினார்.
முன்னதாக, மண்டலம் 3 வார்டு எண்.68 பொன்மேனி மெயின் ரோடு பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்டுள்ள கசிவினை சரிசெய்யும் பணியினை,மேயர், ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில், மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி, கல்விகுழுத்தலைவர் ரவிச்சந்திரன், நகரப்பொறியாளர் லெட்சுமணன், உதவி ஆணையாளர் மனோகரன், கல்வி அலுவலர் ஆதிராமசுப்பு, மக்கள் தொடர்பு அலுவலர்மகேஸ்வரன், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.