மதுரையில் திடீர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
எதிர்பாராமல் கனமழை பெய்ததால் மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டனர்;
மதுரையில் திடீரென பெய்த கனமழையால் தெருவில் புரண்டோடிய தண்ணீர்
மதுரையில் எதிர்பாராதவிதமாக கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மதுரை பழங்காநத்தம் ஆரப்பாளையம் பைபாஸ் சாலை நேரு நகர் மாடக்குளம் வசந்த நகர் ஆண்டாள்புரம் டிவிஎஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில், பலத்த சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. அப்பொழுது, பள்ளி விடும் நேரம் என்பதால், பள்ளி மாணவர்கள் மாணவிகள் நனைந்தபடியே வீட்டுக்கு சென்றனர். திடீரென்று, கனமழை கொட்டியதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.