சார்பு ஆய்வாளர் சட்டையை பிடித்து சண்டை போட்ட ரேஷன் கடை ஊழியர் கைது

மதுரை தல்லாகுளம் பகுதியில் ரோந்து பணியில் இருந்த சார்பு ஆய்வாளரிடம் சண்டையிட்ட ரேஷன் கடை ஊழியரை கைது செய்தனர்;

Update: 2022-01-28 04:45 GMT

மதுரை தல்லாகுளம் பகுதியில் ரோந்து பணியில் இருந்த சார்பு ஆய்வாளரின் சட்டையைப்  பிடித்து சண்டை போட்ட ரேஷன் கடை ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை தல்லாகுளம் காவல் நிலைய குற்ற பிரிவு ஆய்வாளர் மாணிக்கம் இவர் கோரிப்பாளையம் ஜம்பு புரம் பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்துள்ளார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த சங்கரன் என்பவர் நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமான வகையில் சென்றதால் நிறுத்தி காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர் .

அப்போது நான் அரசு ஊழியர்   விசாரணை செய்வீர்களா ? என்று ரேஷன் கடை ஊழியர் சங்கரன் சார்பு ஆய்வாளர் மாணிக்கத்தின் சட்டையை பிடித்து சண்டை போட்டுள்ளார். அங்கிருந்த காவல்துறையினர் தடுத்தும் தொடர்ந்து தகாத வார்த்தைகளில் பேசி சண்டை போட்ட சங்கரனை போலீசார் கைது செய்துள்ளனர் .சார்பு ஆய்வாளர் மாணிக்கத்தின் புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags:    

Similar News