ஆன்லைனில் தேர்வு நடத்த வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்

கொரோனாவால், மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு நடத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2021-11-15 04:45 GMT

கல்லூரியில்,ஆன்லைனில் தேர்வு நடத்தக் கோரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் 500-க்கு மேற்பட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ளது அமெரிக்கன் கல்லூரி.இக் கல்லூரியில் பருவ தேர்வு முறை நடந்து வருகிறது. மாணவர்கள், ஆண்டு தோறும் கல்லூரி வகுப்பறைகளில் தேர்வு எழுது வழக்கமாம். கொரோனாவால், மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு நடத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News