மதுரையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்க மாநில கருத்தரங்கம்

நலவாரிய அட்டை உள்ள அனைவருக்கும் முதல்வர் முதல்வர் காப்பீடு அமல்படுத்த வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.;

Update: 2021-11-21 16:15 GMT

மதுரையில் அமைப்புசாரா தொழிலாளர்களின் கூட்டமைப்பின் சார்பில், மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

மதுரையில் அமைப்புசாரா தொழிலாளர்களின் கூட்டமைப்பின் சார்பில், மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

மதுரையில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் மாநில அளவிலான கருத்தரங்கம் ரயில்வே காலனியில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.

மாநில அமைப்பு செயலாளர் ரங்கராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் சங்க பொறுப்பாளர் கிளாரா முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் கொம்பையா, செயலாளர் கீதா, உள்ளிட்டோர் தீர்மானங்களை முன்னிறுத்தி பேசினர். இந் நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நவாஸ்கனி, மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

தமிழக அரசு நலத்திட்ட உதவிகள் உயர்த்தி அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தும், மத்திய அரசின் தொகுப்பு சட்டங்களை எதிர்த்தும், மாநிலச் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கிய தொழில் வாரியான நல வாரியங்களை காக்க வேண்டும், தொழிலாளர் துறை இதர துறைகளிலும் இயங்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நல வாரியங்களும் ஜி.எஸ்.டி.யில் ஒரு சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், மத்திய-மாநில பட்ஜெட்டுகளில் மூன்று சதவீத அமைப்புசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்புக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும், உப்பள தொழிலாளர் களுக்கு தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சட்டத்தின் கீழ் தனி நலவாரியம் அமைக்க வேண்டும், நலவாரிய அட்டை உள்ள அனைவருக்கும் முதல்வர் முதல்வர் காப்பீடு அமல்படுத்த வேண்டும் என்பன  உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News