காவல்துறை தடகளப் போட்டிகளில் மதுரை காவலர்கள் சாதனை..! காவல் ஆணையர் பாராட்டு..!
காவல்துறை தடகள போட்டியில் மதுரை காவலர்கள் சாதனை செய்துள்ளனர். அவர்களை காவல் ஆணையர் பாராட்டினார்.
மதுரை:
63-வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டல தடகள போட்டிகள் கோவை மாவட்டத்தில் நடைபெற்றது.
இதில், தென்மண்டல காவல்துறை அணி சார்பில் மதுரை மாநகரைச் சேர்ந்த சி.2-சுப்பிரமணியபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் குமரேசன், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தங்கம்,வெள்ளி பதக்கங்களும், மதிச்சியம் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் சிதம்பரம், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் வெள்ளி, வெண்கல பதக்கங்களும், மதிச்சியம் போக்குவரத்து தலைமை காவலர் செந்தில்குமார் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், வெண்கல மற்றும் வெள்ளி பதக்கமும்,
சைபர்கிரைம் காவல்நிலைய தலைமை காவலர் முனீஸ்வரன் நீளம் தாண்டுதலில் வெள்ளி பதக்கமும், கீரைத்துறை காவல்நிலைய தலைமை காவலர் முகமது முபாரக் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கங்களும், சென்ட்ரல் போக்குவரத்து முதல்நிலை காவலர் இளையராஜா 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கமும், தல்லாகுளம் காவல்நிலைய முதல்நிலை காவலர் சின்னபாண்டி மற்றும் ஆயுதப்படை காவலர் யோகேஸ்வரன் ஆகியோர் கோ-கோ விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்றனர்.
வெற்றிபெற்ற அனைவரையும் மதுரை மாநகர் காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், நேரில் அழைத்து ,தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.