மதுரை அண்ணாநகர் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு
Special worship at Madurai Annanagar Muthumariamman temple
மதுரை அண்ணா நகர், யானைக் குழாய் அருள்மிகு முத்துமாரியம்மன் ,ஆடி வெள்ளிக்கிழமை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்திகோடிகளுக்கு காட்சி அளித்தார். இக்கோவிலில், ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் முத்துமாரி அம்மனுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதற்கான ஏற்பாடுகளை, முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன குழு நிர்வாகிகள் செய்திருந்தனர். முன்னதாக, இக்கோயில் வளாகத்தில் ஆடி வெள்ளிக்கிழமை ஒட்டி, கூழ் காய்ச்சும் நிகழ்ச்சி நடைபெற்றது.