மதுரை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் வராஹியம்மனுக்கு சிறப்பு பூஜை
தை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வராஹியம்மன், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது;
வராஹியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் வழிபாடு நடைபெற்றது.
மதுரை தாசில்தார் நகர் மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், தை வெள்ளிக்கிழமையையொட்டி, வராஹியம்மன், துர்க்கை அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகள். இதையொட்டி, பக்தர்களால் வராஹியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அர்ச்சனை வழிபாடுகளும், அதைத் தொடர்ந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், பணியாளர்கள் செய்திருந்தனர்.