மதுரையில், போக்குவரத்து காவல்துறையினருக்கு சிறப்பு மருத்துவ முகாம்
மதுரை போக்குவரத்து காவல்துறையினருக்கு வெரிகோஸ் சிறப்பு மருத்துவ முகாம். ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க கூட்டத்தில் தீர்மானம்;
மதுரையில் உள்ள அனைத்து போக்குவரத்து காவல்துறையினருக்கும் வெரிகோஸ் சிறப்பு மருத்துவ முகாம் நவம்பர் இரண்டாவது வாரத்தில் நடத்தப்படும் என்று, மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது பற்றி விவரம் வருமாறு.:
மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத்தின் சிறப்பு கூட்டம் யூனியன் கிளப்பில் நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத் தலைவர் நெல்லை பாலு தலைமை தாங்கினார். பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் சண்முக. திருக்குமரன் *எந்நாளும் நன்நாளே* என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில், மூத்த ரோட்டரி உறுப்பினர் வினோதன் ரோட்டரியும் சமூக பங்களிப்பும் என்ற தலைப்பில் பேசினார். செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். எஸ்.சரவணன் வருங்கால திட்டங்கள் குறித்து பேசினார். ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க ஆலோசகர் பி. எல்.அழகப்பன், முன்னாள் எம்எல்ஏ கருப்பையா, எம்.சண்முகம், ஆதவன், நவநீதகிருஷ்ணன், வழக்கறிஞர் கார்த்திக், ஆடிட்டர் சேது மாதவா, பாலகுரு உட்பட 50க்கும் மேற்பட்ட ரோட்டரி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மதுரையில், போக்குவரத்து காவலர்களுக்கு ஆப்டிமம் ஹெல்த் கேர் நிறுவனத்தின் உதவியுடன் வெரிகோஸ் சிறப்பு மருத்துவ முகாம் நவம்பர் இரண்டாவது வாரத்தில் நடத்துவது என்றும் மதுரை காந்தி மியூசியத்தில் குமரப்பா குடிலை சரி செய்து கொடுப்பது என்றும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவது என்றும், தீர்மானிக்கப்பட்டது.
முடிவில், பொருளாளர் எஸ்.கதிரவன் நன்றி கூறினார்.