மதுரை மாநகராட்சி பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடக்கி வைத்தார்;
மதுரை மாநகராட்சி “கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்” சிறப்பு மருத்துவ முகாமினை மேயர் இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்தார்:
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.32 காக்கைபாடினியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாமினை, மேயர் இந்திராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி ஆகியோர் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதை பார்வையிட்டனர்.
தமிழக முதலமைச்சர், ஏழை எளியோர் வசிக்கும் இடத்திலேயே சிறப்பு மருத்துவச் சேவை அளிக்கும் வகையில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டு மிகச்சிறப்பான முறையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.32 சின்னசொக்கி குளம் காக்கைபாடினியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் இதயநோய், மகப்பேறு, சிறுநீரகம், பல், கண், தோல், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு மற்றும் மனநல மருத்துவம் ஆகிய 10 துறை சிறப்பு மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும், இம்முகாமில் இரத்த எச்.பி. அளவு இரத்த அழுத்த பரிசோதனை, இரத்த சர்க்கரை அளவு, இரத்த கொழுப்பு அளவீடு, மலேரியா இரத்தத் தடவல், இ.சி.ஜி. கர்ப்பபைவாய் புற்றுநோய் பரிசோதனை, ஸ்கேன், கண்புரைஅளவு, கொரோனா சளி பரிசோதனை மற்றும் தடுப்பு அறிவுரைகள், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
மருத்துவர்கள் பொது மக்களுக்கு பரிசோதனை செய்து, நோயை கண்டறிந்து மேல் சிகிச்சை தேவைப்படுவோர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. பொதுமக்களை பரிசோதித்து நோய்களை முதலிலேயே கண்டறிந்து. அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவது இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இதுபோன்று நடைபெறும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் , கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொடர்ந்து, மண்டலம் 2 வார்டு எண்.15 ஜவஹர்புரம் பகுதியில் மாநகராட்சி சார்பாக விநியோகம் செய்யப்படும் குடிநீரில் குளோரின் சரியான அளவுடன் இருப்பது உள்ளிட்ட தூய்மையான குடிநீர் வழங்கிட சம்பந்தப்பட்ட அலுவலருக்கு, மேயர், ஆணையாளர் அறிவுறுத்தினார்கள்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.31 டாக்டர் தங்கராஜ் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த படிப்பக வளாகத்தில் ஆணையாளர் , ஆய்வு மேற்கொண்டு போட்டித் தேர்விற்கு படிக்கும் மாணவர்களிடம் படிப்பக வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இப்படிப்பக வளாகத்தில், சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி, மின்விளக்கு, வளாகத்தை தூய்மையாக பராமரித்தல் மற்றும் பாதுகாப்பு வசதி உள்ளிட்ட வசதிகளை முறையாக பராமரிக்குமாறும் தொடர்ந்து, அறிஞர் அண்ணா மாளிகை சுற்றுச்சூழல் பூங்காவில் பூங்காவினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பராமரிக்குமாறும் பூங்காவில் மழையால் விழுந்த மரங்களை அகற்றுதல், குப்பைகள் தேவையற்ற செடி கொடிகள், கழிப்பறைகளை பராமரித்தல், மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகளை முறையாக பராமரிக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இம்முகாமில்,துணை மேயர் தி.நாகராஜன் ,மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, சுகாதாரக்குழுத் தலைவர் ஜெயராஜ்,உதவி ஆணையாளர் வரலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர் நல அலுவலர் மரு.கோதை சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர்கள் காமராஜ், சுப்புத்தாய், மாமன்ற உறுப்பினர்கள் விஜயமௌசுமி, முருகன், த.கார்த்திகேயன், மண்டல மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.