மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.;
மதுரை மேலமடை தாசில்தார் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், சித்ரா பௌர்ணமியை ஒட்டி, இக் கோயிலில் அமைந்துள்ள சிவன்- மீனாட்சி பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இந்த கோயிலில், மாதந்தோறும் பௌர்ணமியன்று, மாலை 6 மணிக்கு சிவன்-மீனாட்சி சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள், பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, சித்ரா பௌர்ணமியை யொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
இதே போல, மதுரை தாசில்தார் சித்திவிநாயகர் ஆலயத்தில், சித்ரா பௌர்ணமியை ஒட்டி, சிவன், மீனாட்சிக்கு சிறப்பு பூஜைகளை, குப்பு பட்டர் செய்தார். இதையடுத்து, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மதுரை அண்ணாநகர் யானைக் குழாய் முத்து மாரியம்மன் ஆலயம், வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்திலும், சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மதுரை சாத்தமங்கலம், அருள்மிகு பால விநாயகர் ஆலயத்தில், ஈஸ்வர பட்டர் தலைமையில், பௌர்ணமி சிறப்பு நடைபெற்றது. பக்தர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.