மதுரை கோயில்களில் இம்மாதம் 15 - ல் சிவப்பிரதோஷம்
திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூலநாதர் ஆகிய ஆலயங்களில் அன்று மாலை ஐந்து மணி அளவில் பிரதோஷம் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்;
மதுரை கோயில்களில் வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 15) சிவப்பிரதோஷ விழா நடைபெறுகிறது.
மதுரை கோயில்களில் இம்மாதம் 15 -ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிரதோஷ விழா நடைபெறுகிறது. மதுரையில் ,உள்ள சர்வேஸ்வர ஆலயம், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் ஆலயம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் சோழவந்தான் விசாக நட்சத்திரமான சிவாலயம், திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூலநாதர் ஆகிய ஆலயங்களில் அன்று மாலை ஐந்து மணி அளவில் பிரதோஷம் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ,கோவில் நிர்வாகிகளும், விழா குழுவினரும் வெகு சிறப்பாக செய்து வருகின்றனர்.