மதுரையில் மாணவ, மாணவிகளுக்கு சிலம்பாட்ட பயிற்சி முகாம் தொடக்கம்
மதுரை மாவட்டம், அவுட் போஸ்ட் பகுதில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில், மாணவ மாணவிகளுக்கு சிலம்பாட்ட பயிற்சி தொடங்கியது;
மதுரையில் சிலம்பாட்ட பயிற்சி வகுப்புகள் தொடங்கியது.
மதுரை மாவட்டம், அவுட் போஸ்ட் பகுதில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில், மாணவ மாணவிகளுக்கு சிலம்பாட்ட போட்டிகள் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாவட்டத் தலைவர் மகேந்திரவேல், டேனியல் தங்கராஜ் துணைத்தலைவர் மணி, மதுரை மாவட்ட சிலம்பாட்டக் கழக செயலர், உதவிச் செயலாளர், தேசிய சிலம்பச் சம்மேளன பொருளாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இன்றைய இளம் தலைமுறையினர் ஸ்மார்ட்போனில் தங்களது முழு நேர வாழ்க்கையை செலவிடுவதை குறைக்க மாணவர்களுக்கு சிலம்பாட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில், ஏரளமான மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர்.