ஆபத்தான நிலையிவ் பஸ் பயணம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள் பெண்கள்

பெண்கள் பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் காலை 7 மணி முதல் 9.30 மணி அளவில் குறைவான பேருந்துகளை இயக்கப்படுகிறது;

Update: 2022-03-14 07:30 GMT

மதுரையில் குறைவாக பேருந்துகள் இயங்குவதால் படிக்கட்டில் ஆபத்தான நிலையிவ் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்

பேருந்துகளில் ஆபத்தான முறையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பயணம் செய்யும் நிலை குறித்து சமூகஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம், சத்திரப்பட்டி, ஊமச்சிகுளம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, அதிக அளவு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெண்கள் பள்ளி கல்லூரிகளுக்கும் மற்றும் வேலைக்கு செல்லும் நேரமான காலை 7 மணி முதல் 9.30 மணி அளவில் குறைவான பேருந்துகளை இயக்கப்படுகிறது. இதில், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளும் வேலைக்கு செல்லும் பெண்களும் ஆண்களும் ஒரே பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்லும் அவலம் ஏற்படுகிறது.

இதில், என்ன கூற்று என்னவென்றால் நடத்துனரே, படியில் தொங்கி கொண்டே பயணம் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் அதிக அளவு பயணம் செய்யக்கூடிய பகுதிகளில் கூடுதலாக பேருந்துகளை இயக்கி அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும் என்பது அனைவரும் கோரிக்கையாக உள்ளது .

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கையாகஉள்ளது. இதேபோன்று மற்றொரு பகுதியான கூடல்நகர், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகளிலும் , இதே நிலைதான் ஏற்படுகிறது . அதிக அளவு ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கி கொண்டு வரக்கூடிய அவலத்தை கண்கூடாக காண முடிந்தது. இதனை போக்க அரசு போக்குவரத்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரும் கோரிக்கையாக உள்ளது . மாணவர்கள் உயிர் காக்கப்படும் உரிய தீர்வு கிடைக்குமா எதிர்பார்ப்புடன் பெற்றோர்களும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் உள்ளனர்.

Tags:    

Similar News