மதுரை கோச்சடை அருகே தெருக்களில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் அருகே தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வருவதால், கொசுத் தொல்லையும் பெருகி வருகிறது;
மதுரை கோச்சடை பகுதியில் சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் வகையில் குவிந்துள்ள குப்பைகள்
குப்பை மேடாக காட்சியளிக்கும் கோச்சடை: தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை.
மதுரை மாநகராட்சி, வார்டு எண். 22, மண்டலம் 1-ல் உள்ள மதுரை கோச்சடை முத்தையா கோயில் அருகே, முத்து நகர் பகுதியில், சாலையிலே குப்பைகள் கொட்டி வருவதால், இப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய்களை பரப்பும் இடமாக மாறி வருகிறது. மேலும், மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் அருகே தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வருவதால், கொசுத் தொல்லையும் பெருகி வருகிறது. இது குறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுப்பதுடன், குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.