மதுரை பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து திருட்டு
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் தாலி செயின் பறிப்பு மதுரை பகுதியில் தொடர் வழிப்பறி திருட்டை தடுக்க போலீஸார் நடவடிக்கை தேவை;
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 8 சவரன் தாலி செயின் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் அகிலா சாந்தி இவர் தன்னுடைய கணவருடன் உத்தங்குடி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இவர் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர் .தாலி செயினை படித்தபோது அகிலா சாந்தியும் அவரது கணவரும் கீழே விழுந்து லேசான காயம் ஏற்பட்டது.இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் வழிப்பறி செய்து தப்பியோடிய மர்ம நபர்களை பிடிக்க முற்பட்டுள்ளனர்.
வழிப்பறி திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். இந்நிலையில் அகிலா சாந்தி இச்சம்பவம் குறித்து கோ. புதூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸர் தனிப்படை அமைத்து வழிப்பறியில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது