மதுரை நகரில் குளமாக மாறிய சாலைகள்: கண்டு கொள்ளுமா மாநகராட்சி ?
பள்ளமான சாலைகளை சீரமைத்து தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்போர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.;
மதுரை மாநகராட்சி சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர்
பலத்த மழையால், மதுரை மாநகராட்சி சாலைகள் குளமாய் மாறியுள்ளதால், பொதுமக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், மதுரையில் பல இடங்களில் சாலைகள் குளம் போல மாறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மதுரை நகரில் கடந்த சில நாள்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், மதுரையில், மேலமடை, வண்டியூர், யாகப்பநகர், கோமதிபுரம், ஜூப்பிலி டவுன், அம்பிகை நகர் உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர் செல்ல வழியில்லாமல் குளம் போல தேங்கியுள்ளன. இதனால், பாதசாரிகளும், இரு சக்கர வாகனத்தில் செல்வோரும், பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனராம். மேலும், கொசுத் தொல்லையும் பெருகி வருவதாகவும் தெரிகிறது. இது குறித்து, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் பள்ளமான சாலைகளை சீரமைத்து தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதி குடியிருப்போர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.