மதுரை மத்திய தொகுதியில் சாலை வசதி: அமைச்சர் தொடக்கம்

மத்திய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை திறக்கப்பட்டது;

Update: 2023-08-23 07:15 GMT

புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மதுரை மாநகராட்சி மத்திய  சட்டமன்ற தொகுதி உறுப்பினர்  மேம்பாட்டு நிதியிலிருந்து

புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.77 சுப்பிரமணியபுரம் பகுதிகளில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் மற்றும் பேவர் பிளாக் சாலையினை, மேயர் இந்திராணி பொன்வசந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, ஆணையாளர் கே.ஜே. பிரவீன் குமார், ஆகியோர் முன்னிலையில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் (22.08.2023) பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மண்டலம் 3 வார்டு எண்.77 சுண்ணாம்பு காளவாசல் காஜா 1 முதல் 6 குறுக்குத் தெருக்களில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை மற்றும் காஜா 3வது குறுக்குத் தெருவில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகள் என, மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை, அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் சேகர், மாமன்ற உறுப்பினர் ராஜபிரதாபன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News