மதுரை நீதிமன்றம் அருகே ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்ட சாலை
மதுரை நீதிமன்றம் அருகே ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்ட சாலையால் போக்குவரத்து நெருக்கடி குறைய வாய்ப்புள்ளது.;
மதுரை நீதிமன்றம் ரேஸ்கோர்ஸ் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் பட்டுள்ளது. நீதிமன்ற அவுட்போஸ்ட்டும் ஒருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், மதுரை நகரில் போக்குவரத்து குறைய வாய்ப்புண்டா என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாகும்.
இதேபோல், மதுரை நகர் காவல்துறையானது, மதுரை அண்ணாநிலையம், கோரிப்பாளையம் அரசு மருத்துவமனை, சிம்மக்கல் பஸ் நிறுத்தம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் ஆட்டோக்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.