மதுரையில் குளம் போல மாறிய சாலைகள்: மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

மதுரை மாநகரில் மழை பெய்வதால் சேரும் சகதியுமாக சாலைகளின் நிலை மிக மோசமாக உள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Update: 2023-07-11 11:44 GMT

மதுரை கோமதிபுரம், ஜூப்பிலி டவுன், தாழை வீதியில் மோசமான நிலையில் சாலை.

மதுரை:

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ,மதுரை அண்ணா நகர் மேலமடை வீரவாஞ்சிதெரு, காதர் மொய்தீன் தெரு ,மருது பாண்டியர் தெரு, அன்பு மலர் தெரு, கோமதிபுரம் ஜூபிலி டவுன் ,தாழை வீதி, திருக்குறள் வீதி குருநாதர் தெரு, ஆகிய தெருக்களில் குடிநீர் பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டது.

ஆனால் அந்த குழிகள் சரிவர மூடப்படாமல் உள்ளதால், மழைக்காலங்களில் அந்த பகுதிகளில் மழை நீர் தேங்கி குளம் போல காட்சி அளிக்கிறது. இதனால், அவ்வழியாக பாதசாரிகளும், இருசக்கர வாகனத்தில் செல்வோரும் கால் இடறி கீழே விழுகின்ற நிலை ஏற்படுகிறது.


இது குறித்து ,மதுரை மாநகராட்சி அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும், தோண்டப்பட்ட குழிகள் மூடப்படவில்லை.  மேலும், சாலையைத்  தோண்டும் போது கால்வாய் கழிவு செல்லும் குழாய்களில், உடைப்பு ஏற்பட்டு அதுவும், மழை நீருடன் கலந்து செல்கிறது.  இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்றும் ஏற்பட வாய்ப்புள்ளது .

மேலும், மதுரை மாநகராட்சி ஆனது கழிவுநீரை வைகை ஆற்றில் சென்று கலப்பதையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை வீரவாஞ்சி தெருவில் மற்றும் காதர்மொய்தீன் தெருவில் பள்ளங்களில் மழைநீர் மற்றும் வெளியேறும் கழிவு நீர் தேங்கி இருப்பதால், இரவு நேரங்களில் விஷ சந்துக்கள் நடமாடுவதாகவும், அது பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகவே ,மதுரை மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் ஆணையாளர் விரைந்து நடவடிக்கை எடுத்து, சாலையோர பள்ளங்களை முடியும், சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்போர் சங்கங்கள் மற்றும் பொது மக்கள்  கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News