மதுரை வைகை காலனி மேற்கு பகுதியில், அடிப்படை வசதிகளை சீரமைக்க கோரிக்கை:

மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.;

Update: 2021-10-09 19:01 GMT

மதுரை எம்எல்ஏ கோ.தளபதியிடந் கோரிக்கை மனு அளித்த வைகை காலனிவாசிகள்.

மதுரை வைகை காலனி மேற்கு பகுதியில், பாதாள சாக்கடை குழாய்களை மாற்ற, குடியிருப்போர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மதுரை வைகை காலனி மேற்கு பகுதியில், பாதாள சாக்கடை பகுதியில் குழாய்களை மாற்ற, குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கோ. தளபதியிடம் மனு அளித்தனர்:

அவர்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: மதுரை அண்ணாநகர் வைகை காலனி, மேற்கு பகுதியில் பழைய தார்ச்சாலையை எடுத்து விட்டு, புதிய தார்ச் சாலையை அமைக்க வேண்டும், மழைநீர் சேமிப்பு கிடங்கு, காலனியில், மையப் பகுதியில் உள்ள பூங்காவை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட, மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News