குடிநீர் குழாய் அமைக்கும் பணியில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணம்

குழாய் அமைக்கும் போது உயிரிழந்த ஈரோட்டைச் சேர்ந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் நிவாரணநிதி வழங்கப்பட்டது

Update: 2022-06-04 10:30 GMT

ம் ரூ.15 லட்சத்திற்கான காசோலைகளை உயிரிழந்தவரின் மனைவி தேவி, மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் ஆகியோர் வழங்கினர்.

மதுரை மாநகராட்சிவிளாங்குடி பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியின் போது  நேரிட்ட விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், சாத்தமங்கலம் உள்வட்டம், விளாங்குடி கிராமம், ராமமூர்த்தி நகர் மெயின் வீதியில் மாநகராட்சி சார்பில், நடைபெற்ற வந்த குடிநீர் குழாய் அமைக்கும் பணியின்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மண்சரிவினால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வீரணன் என்ற சதீஷ் ( 34) என்பவர் உயிரிழந்தார். இவ்விபத்தில், உயிரிழந்த சதீஷ், மனைவி தேவி தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதன்படி , மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையும், தனியார் ஒப்பந்ததாரர் வழங்கிய நிவாரணத் தொகை ரூ.10 லட்சத்திற்கான காசோலை என மொத்தம் ரூ.15 லட்சத்திற்கான காசோலைகளை உயிரிழந்தவரின் மனைவி தேவி, மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங்  ஆகியோர்  வழங்கினர்.

Tags:    

Similar News