பண மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது

மதுரையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்பாக 8 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்;

Update: 2023-03-01 18:00 GMT

பைல் படம்

மனை இடம் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் கைது.

மதுரை, கே புதூர், சூர்யா நகர், மீனாட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் 64. இவரிடம் ஒத்தக்கடை அரசரடியைச் சேர்ந்த கருப்பையா மகன் ஜெயச்சந்திரன் 34 என்பவர் மனை இடம் வாங்கி தருவதாக கூறி 2016 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு தவணைகளாக 10 லட்சத்து 14 ஆயிரம் வரை பெற்றுள்ளார். ஜெயச்சந்திரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதற்காக அந்த பணத்தை வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய நாட்களிலிருந்து அவருக்கு இடமும் வாங்கி கொடுக்கவில்லை, வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இது குறித்து சுப்பிரமணியன் கேட்டபோது ஆத்திரமடைந்த ஜெயச்சந்திரன், அருண் , சுப்புலட்சுமி ராஜலெட்சுமி ஆகியோர் அவரை ஆபாசமாக பேசி பணம் தராமல் மிரட்டி உள்ளனர் .இது குறித்து சுப்பிரமணியன் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார் .போலீசார் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து ஜெயச்சந்திரனை கைது செய்தனர்.

 வாகனங்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்திய  ஆறு பேர் கைது

மதுரை  பிபி குளம், முல்லை நகர், நேதாஜி தெருவை சேர்ந்தவர் ஜெயக்கொடி மகன் ஈஸ்வரன்( 33.) இவர் 4 சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கும் வேறு சிலருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் அங்கு நிருத்தி இருந்த வாகனங்களை ஆறு பேர் கொண்ட கும்பல்களான முல்லை நகர் கண்ணப்பன் தெருவை சேர்ந்த பழனிச்சாமி மகன் தினேஷ்குமார் 26, இந்திரா நகர் முதல் தெருவை சேர்ந்த சரவணன் 39, நர்மதா நதி தெருவை சேர்ந்த கார்த்திகேயன் 26, கிருஷ்ணாபுரம் எட்டாவது தெருவை சேர்ந்த முத்துவேல் 23, மீனாம்பாள்புரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர் 24,, முல்லை நகர் அருண் பாண்டியன் 24,ஆகியோர் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இது குறித்து ஈஸ்வரன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனங்களை அடித்து நொறுக்கிய ஆறு பேரையும் கைது செய்தனர்.

மது அருந்திய மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்  சாவு

மதுரை , கே புதூர் ராமவர்மா நகர் 5வது தெருவை சேர்ந்தவர் சதாம் உசேன் 32. இவர் மஞ்சள் காமால் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் .இந்த நிலையில் மது அருந்தி குடிபோதையில் இருந்தார். இவர் கற்பக நகர் 5வது தெருவில் சென்ற போது திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய அப்பா ஷெரீப் கே.புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் சதாம் உசேனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மாமியாரை தாக்குதல் நடத்திய மருமகன் கைது 

மதுரை மார்ச் 1 மதிச்சியம் ஆர் ஆர் மண்டபத்தைச் சேர்ந்தவர் லதா 49. இவர் அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவரது மருமகன் வைகை வடகரையை சேர்ந்த கண்ணன் மகன் சதீஷ்குமார் 33. இவர்களுக்குள் குடும்ப பிரச்சினையில் முன் விரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில் சம்பவத்தன்று மருமகன் சதீஷ்குமார் மாமியார் லதாவை ஆபாசமாக பேசித் தாக்கினார். இந்த சம்பவம் குறித்து லதா மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மருமகன் சதீஷ்குமாரை கைது செய்தனர்.


Tags:    

Similar News