மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில் ராம நவமி விழா
பக்தர்கள், பால் பயிர் இளநீர் போன்ற அபிஷேக திரவியங்களை கொண்டு வந்து பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்தனர்;
மதுரை அண்ணா நகர் , தாசில்தார் நகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. கோவிலில் அமைந்துள்ள பெருமாள், ஸ்ரீதேவி, மற்றும் பூமி தேவி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
பக்தர்கள், பால் பயிர் இளநீர் போன்ற அபிஷேக திரவியங்களை கொண்டு வந்து, பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதை அடுத்து, பெருமாள் அலங்கரிக்கப்பட்டு, பக்தருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. கோவில் நிர்வாகத்தின் சார்பில், ராம நவமி விழாவில் பங்கேற்ற பக்தருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபை நிர்வாகிகள் செய்தனர்.
இதே போன்று , மதுரை அருகே உள்ள ஒத்தப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ராமர் ஆலயத்தில், ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி, ராமர் சீதா மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது கோவிலின் சார்பில் பக்தர்களுக்கு ,இனிப்பு பானகம், நீர் மோர் வழங்கப்பட்டது. இதேபோல், ஓடைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு ஆஞ்சநேயருக்கு, ராம நவமியை ஒட்டி, சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் ஆலயத்தில், ராம நவமி யையொட்டி, ராமர், சீதா பிராட்டியாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.