மதுரையில் வீடுகளைச்சூழ்ந்த மழைநீரால் பொதுமக்கள் அவதி
மதுரை கூடல் நகர் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளம் மழை நீரை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மதுரை கூடல் நகர் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளம் மழை நீரை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை கூடல் நகர் ரயில்வே ஜங்ஷன் அருகே உள்ள குளம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியதால் நிர்வடி வாய்க்காலில் இருந்து வெளியேறும் உபரி தண்ணீர் குடியிருப்பு பகுதிகள் முழுவதும் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டபோது இது மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள் வராது பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடியிருப்பு பகுதி முழுவதும் தண்ணீர் பரவ வாய்ப்புள்ளது. எனவே, தண்ணீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.