மதுரையில் ரௌடியிடம் குற்றங்களில் இனி ஈடுபடமாட்டேன் என எழுதிய வாங்கிய போலீஸார்

தமிழகம் முழுவதும் ரவுடிகளை அடக்கும் நடவடிக்கையை போலீசார் எடுத்து வருகின்றனர்;

Update: 2021-10-06 12:28 GMT
மதுரையில் ரௌடியிடம்  குற்றங்களில் இனி ஈடுபடமாட்டேன் என எழுதிய வாங்கிய போலீஸார்

பிரபல ரௌடி வரிச்சூர் செல்வம்

  • whatsapp icon

மதுரையில் பிரபல ரவுடியிடம் இனிமேல் குற்றங்களில் ஈடுபட மாட்டேன் என பத்திரத்தில்  போலீசார்  எழுதி வாங்கினர்.

மதுரையின் பிரபல ரவுடியாக இருந்த வரிச்சூர் செல்வத்திடம், இனிமேல் குற்றங்களில் ஈடுபட மாட்டோம் என போலீசார் ஒப்பந்தம் எழுதி வாங்கினர். தமிழகம் முழுவதும் ரவுடிகளை அடக்கும் நடவடிக்கையை போலீசார் எடுத்து வருகின்றனர். மேலும் தற்போது குற்ற நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருப்பவர்களிடம், இனிமேல் ரவுடி சம்பங்களில் ஈடுபட மாட்டோம் என போலீசார் ஒப்பந்தம் எழுதி வாங்கி வருகின்றனர்.

அந்த வகையில், மதுரை மாவட்டம், ரவுடிகள் மீதான குற்றத்தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக, கருப்பாயூரணி காவல் நிலையத்தில், பிரபல ரவுடியாக இருந்த செல்வம் (எ)வரிச்சியூர் செல்வம் என்பவரை அழைத்து வந்து குற்ற தடுப்பு நடவடிக்கையாக 110 Crpc பத்திரம் எழுதி வாங்கப்பட்டது. மேலூர் வருவாய் கோட்டாட்சியர் மூலம் அவருக்கு 110 crpc பத்திரம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News