பராபட்சமின்றி நெல் கொள்முதல்: பா.ஜ.க.வினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் பராபட்சமின்றி நெல்லை வாங்கக் கோரி, பா.ஜ.க.வினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.;
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பா.ஜ.க.வினர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் அனைவரிடம் பராபட்சமின்றி, நெல்லை வாங்கக் கோரி, பா.ஜ.க.வினர், நிர்வாகி மகா. சுசீந்திரன் தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தமிழக அரசு கிராமங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து செயல்பட்டு வருகிறது.
மேலும் கடந்த சில நாள்களுக்கு முன்பு மதுரை மாவட்டத்தில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களை அமைச்சர் பி. மூர்த்தி திறந்து வைத்தார்.
இந்த நிலையில் மதுரை மாவட்ட பா.ஜ.க.வினர் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பாரபட்சமின்றி நெல் கொள்முதல் செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.