மதுரை : மருத்துவமனைக்கு வராத மருத்துவர்களை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

பழங்காநத்தம்: ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு மருத்துவர்கள் வராததால் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்.;

Update: 2021-11-29 16:10 GMT

மதுரை பழங்காநத்தம் பகுதியில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மகப்பேறு மருத்துவமனை கடந்த மூன்றாண்டு காலமாக சரியான முறையில் செயல்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட இப்பகுதி மக்கள் கூறியதாவது:

கொரோனா காலத்திலும் பேரிடர் காலத்திலும் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் வரவில்லை. அத்துடன் கடந்த 20 நாட்களாக மருத்துவமனைக்கு மருத்துவர் வராததால் இப்பகுதியின் பொதுமக்களும் கர்ப்பிணி பெண்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று குற்றம் சாட்டினர்.

போராட்டம் அறிந்து சம்பவ இடத்திற்கு சரகத்திற்கு உட்பட்ட காவல்துறையினர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நாளையிலிருந்து இது மருத்துவமனைக்கு முறையாக மருத்துவர் வருவதற்கான முயற்சி எடுப்பதாகவும் கர்ப்பிணி பெண்களுக்கு முறையாக இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என உத்தரவாதமும் கொடுத்தனர். இதனால் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் இனி முறையாக மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வரவில்லை என்றால் மதுரை நகர் சாலையில் மறியல் போராட்டம் நடத்துவோம் என கோரிக்கையை முன்வைத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News