மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொது மக்கள் மறியல் போராட்டம்
மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொது மக்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.;
மதுரை மதுரை மாநகராட்சி 20 வது வார்டில், அடிப்படை வசதி செய்ய மறுக்கும் மதுரை மாநகராட்சியை கண்டித்து வீடு முழுவதும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் மற்றும் வரி கட்ட மாட்டோம் என்ற மாமன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வார்டு கவுன்சிலரே, சாலையில் இறங்கி போராட்டம் நடத்தும் நிலையில், மதுரை மாநகராட்சி உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதியில், விரிவாக்கப்பட்ட வார்டு எண் 20 ,பழைய விளாங்குடி மற்றும் புது விளாங்குடி குடிநீர் மற்றும் அடிப்படை வசதி இதுவரை மதுரை மாநகராட்சி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி மாமன்ற உறுப்பினர் நாகஜோதி தலைமையில், பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும், மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லையாம். மதுரையில் கடந்த சில நாட்களாக மழை பொழிந்ததால், ரோடுகள் குண்டும் குழியுமாகும் சேரும், சகதியுமாக உள்ளது. எனவே இன்று பொதுமக்கள் தீபாவளி கொண்டாட முடியவில்லை .
இதனை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் அறிவித்தனர். போராட்டத் திற்கு செல்ல முயன்ற போது, காவல்துறையினர் அவர்களை தடுத்தனர். இதனால் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. காவல்துறை பேச்சுவார்த்தைகளால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக அந்தப் பகுதி முழுவதும் வீடு முழுவதும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரை நகரில் பல்வேறு இடங்களில் சாலையில் குண்டும் குழியுமாகவும் கழிவுநீரும் மழை நீரும் சாலையின் நடுவே ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது.
அத்துடன், சாலையில் இரு புறங்களிலும் மழை நீர் தேங்கி நிற்பதால் , இரவு நேரங்களில் பொதுமக்களும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மதுரையில் அண்ணா நகர், மேலமடை, கோமதிபுரம், தாசில்தார் நகர், வண்டியூர், யாகப்பா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருக்களில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளன .
மதுரை தாசில்தார் நகர் வீரவாஞ்சி தெரு, காதர் மொய்தீன் தெரு, அன்பு மலர் தெரு, தாளை வீதி ஆகிய பகுதிகளில் பல நாட்களாக மழை நீர் குளம் போல தேங்கி மதுரை மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.