மருத்துவர் வராததால் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
மதுரை பழங்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் வராததால் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
மதுரை பழங்காநத்தம் பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மகப்பேறு மருத்துவமனை மூன்று ஆண்டு காலமாக சரியான முறையில் செயல்படவில்லை என்றும் இங்கு கொரோனா காலகட்டத்திலும் பேரிடர் கால கட்டத்தில் இம்மருத்துவமனை சரியாக செயல்படவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
இங்கு உள்ள மருத்துவமனையில் கடந்த 20 நாட்களாக சரியாக மருத்துவர்கள் வருவதில்லை.இதனால் இப்பகுதி பொதுமக்கள் மருத்துவ வசதி முறையாக கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்து காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கூட்டத்தை கலைக்க கூறினர்.
பொதுமக்களிடம் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் முறையாக வருவார்கள் கர்ப்பிணி பெண்களுக்கு பதிவு செய்து சிகிச்சை சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறினர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் இனி மருத்துவமனை முறையாக செயல்படவில்லை என்றால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி கலைந்து சென்றனர்.