பொங்கல் பரிசு பொருள்கள் தரமில்லை: பாஜக குற்றச்சாட்டு
அனைத்து பொருட்களும் தரமற்றதாக வழங்கப்படுவதாக புகார் கூறி பொருட்களுடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டனர்
பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமற்றதாக புகார் கூறி மாவட்ட ஆட்சியரிடம் பாஜகவினர் மனு அளித்தனர்.
மதுரையில் பொங்கல் தொகுப்புக்கான மஞ்சள் பைகள் இல்லாததால், தொகுப்பு வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொகுப்பில் 21 பொருட்கள் இருப்பதாக அறிவித்து விட்டு, தற்போது குறைவான எண்ணிக்கையில் வழங்கப்படுவதாகவும், அனைத்து பொருட்களும் தரமற்றதாக வழங்கப்படுவதாக புகார் கூறி பொருட்களுடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டனர்.
இதில், பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கிவிட்டு வெளியில் வந்த அனைவகரும் செய்தியாளர்களிடம் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை செய்தியாளர்களிடம் காண்பித்தனர்.