மதுரையில் 14 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது

மதுரையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்;

Update: 2023-06-30 10:45 GMT

பைல் படம்

மதுரை தல்லாகுளம், மதிச்சியத்தில் 14 கிலோ கஞ்சாவுடன் மூன்று பேர் கைது

மதுரை, புது நத்தம் ரோடு ஓம் சக்தி கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது, அங்கு விற்பனை செய்த இரண்டு பேரை பிடித்தனர். அவர்களிடம் சோதனை செய்தபோது, அவர்களிடம் ஒன்பது கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து, பிடிபட்ட நபர்களிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், ஆண்டிப்பட்டி ,கள்ளர் தெரு விருமாண்டி 52, ஆண்டிப்பட்டி மணியாரம் பட்டி கணேசன் 52 .என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஆழ்வார்புரத்தில் வாலிபர் கைது

மதிச்சியம் போலீசார் ஆழ்வார்புரம் ஓபுளாபடித்துறையில் கஞ்சா விற்பனை செய்த அண்ணா நகர் எஸ்எம்பி காலனி வேல்முருகன் மகன் அர்ஜுன் 19 என்ற வாலிபரை பிடித்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப், ஐ பேட், ஸ்மார்ட் வாட்ச் திருட்டு

மதுரை, திருமங்கலம் கப்பலூர் உச்சப்பட்டியை சேர்ந்தவர் போஸ் மகன் சரவணகுமார் 28. இவர் மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் ஸ்டாண்ட் எதிரே தனது காரை நிறுத்தி இருந்தார். அங்கிருந்து வெளியே சென்று விட்டு பின்னர் வந்து பார்த்தபோது காரில் பின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. காருக்குள் வைத்திருந்த லேப்டாப் ஒன்று ,ஐபேட் ,ஸ்மார்ட் வாட்ச், ஹெட் போன் முதலிய பொருட்கள் திருடப்பட்டிருந்தன்.இந்த திருட்டு குறித்து சரவணகுமார் கே புதூர்போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கார்கண்ணாடியை உடைத்து திருடிய திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.

வைகை தென்கரையில் பயங்கர ஆயுதங்களுடன் இரண்டு வாலிபர்கள் கைது

மதுரை வைகை தென்கரையில் இரண்டு வாலிபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக தெப்பக்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த இரண்டு வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பிடிபட்ட வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர் .அவர்கள் கொள்ளையடிக்கும் திட்டத்தில் அங்கு பதுங்கி இருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து இரண்டு அரிவாளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட நபர்களை யார் என்று விசாரித்த போது வண்டியூர் செம்மண் சாலை சௌராஷ்டிரா புரம் தண்டீஸ்வரன் மகன் ராஜேஷ் என்ற காட்டுவாசி 19, வண்டியூர் தேவர் நகர் முத்துப்பாண்டி மகன் விஜயகுமார் என்ற கோணி 24 என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

விஷம் குடித்து ஒருவர் தற்கொலை

மதுரை  மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமானுஜம் மகன் ஆறுமுகம் 48. இவர் அல்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மனம் மனமுடைந்து காணப்பட்டார்.இந்த நிலையில் வீட்டில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார் .அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்தார் .இது குறித்து அவருடைய மனைவி வாணி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறுமுகத்தின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

மதுரை  திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சிவஞானம் மகள் சுகன்யா வள்ளி 26. இவர் பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய தந்தை சிவஞானம் திருநகர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து சுகன்யாவள்ளியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News