மரக்கடை உரிமையாளரை தாக்கியவர் கைது

மதுரையில் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்;

Update: 2023-02-26 14:45 GMT

பைல் படம்

மதுரை மேல வெளி வீதியில் மாமுல் தர மறுத்த மரக்கடை உரிமையாளரை  தாக்கிய வாலிபர் கைது

மதுரை புது ஜெயில் ரோடு மில் காலனியை சேர்ந்தவர் செல்வம் 53. இவர் மேல வெளி வீதி ஹீரா நகரில் மரக்கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு வந்த ஹீரா நகரை சேர்ந்த சையது அபுதாஹிர் என்பவர் மாமூல் கேட்டுள்ளார். இதற்கு கடைக்காரர் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சையது அபுதாஹிர் அவரை ஆபாசமாக பேசி தாக்கினார். இந்த தாக்குதல் குறித்து மரக்கடை உரிமையாளர் செல்வம் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய சையது அபுதாகீரை கைது செய்தனர்.

மாடக்குளத்தில் இளம் பெண்ணை வீடியோபடம் எடுத்து மிரட்டி வாலிபர் மீது வழக்குப்பதிவு

மதுரைமாடக்குளம் மருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் ரவி மகன் பிரசாத். இவர் இளம்பெண் ஒருவரை காதலித்துவந்தார்.அந்த பெண்ணை செக்ஸ் டார்ச்சர் கொடுத்து அவரை போட்டோ எடுத்துள்ளார். வீடியோ படமும் எடுத்துள்ளார். இந்த போட்டோவையும் இந்த வீடியோ படத்தையும் காட்டி அவரை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தனர்.பெண்ணை வீடியோ படம் எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர் ரவிமீது வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

திடீர் நகரில்  டூத் பேஸ்ட்க்கு பதிலாக எலி பேஸ்ட்டில் பல் விளக்கியவர் பலி

மதுரை திடீர்நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாயத்தேவர் மகன் மகாலிங்கம். இவர் சம்பவத்தன்று வீட்டில் பல் விளக்கியபோது டூத் பேஸ்ட் என நினைத்து எலி பேஸ்ட்டில் பல் விளக்கினாராம்.இதனால் அவர் மயங்கி விழுந்தார்.பின்னர் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி மகாலிங்கம் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மகன் ராமச்சந்திரன் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மகாலிங்கத்தின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் சுருக்கெழுத்து தேர்வில் ஆள் மாறாட்டம்: இரண்டு மாணவிகள் மீது வழக்கு 

தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டு சுருக்கெழுத்து தேர்வு பல்வேறு மையங்களில் நடந்தன.இந்த தேர்வு மதுரையில் திருப்பரங்குன்றம் மெயின் ரோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது .அங்கு தேர்வு எழுதியவர்களில் இரண்டு பேர் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தெரிய வந்தது. இது குறித்து சென்னை தேர்வு வாரிய தலைவர் செந்தில்குமார் மதுரை ஜெயந்ஹிந்த்புரம் போலீசில் புகார் தெரிவித்திருந்தார் .அந்த புகாரில் சித்திரலட்சுமி என்பவருக்கு பதிலாக வித்யாபாரதி என்பவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி இருப்பதாக தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து போலீசார் சித்திரலட்சுமி , வித்யா பாரதி ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News