இட ஒதுக்கீடு கோரி மதுரையில் பாமக, வன்னியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இட ஒதுக்கீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

Update: 2023-05-30 01:00 GMT

மதுரையில் பாமக, வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

வன்னியர்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு ஆணையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் , தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலை விட்டு வெளியேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி , பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம், தேவேந்திரர் மக்கள் நலச்சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் , பாமக மற்றும் வன்னியர் சங்கம் தேவேந்திரர் மக்கள் நல சங்கம் சார்பில் தேவேந்திர குல வேளாளர்களை பட்டியலை விட்டு வெளியேற்றம் செய்ய வேண்டும் மக்கள் தொகை அடிப்படையில் இட பங்கீடு வழங்கிடவும் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டு ஆணையை உடனடியாக நிறைவேற்ற கோரியும்,வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் நடராஜன் மற்றும் தேவேந்திரர் மக்கள் நலச் சங்கத் தலைவர் தேவேந்திரன் தலைமையிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இந்த ஆர்ப்பாட்டத்தில், பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் மற்றும் பாமக பொருளாளர் திலகபாமா கலந்து கொண்டு, கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பாமக மாவட்ட செயலாளர்கள் அழகர்சாமி, வீரக்குமார்,பா.ம க மற்றும் வன்னியர் சங்கம் தேவேந்திர குல வேளாளர், தமிழர் தேசிய கழகம். மல்லர் பேரராயம். புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News