மதுரை: சமூக ஆர்வலரின் மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரை: சமூக ஆர்வலரின் மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-01-21 11:11 GMT

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடம்.

மதுரை அனுப்பானடி பகுதியில் சமூக ஆர்வலராக இருப்பவர் முருகானந்தம். இரு சக்கர வாகனத்தில் வந்த சிலர் அவரது வீட்டின்  அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். அவரைப் பிடிக்காத சமூக விரோதிகள் பெட்ரோல் குண்டு வீசினார்களா அல்லது வேறு ஏதும் பிரச்சனையா என்று, மதுரை தெப்பக்குளம் காவல் நிலையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News