வெங்கடேசன் எம்பியை கைது செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு
வெங்கடேசன் எம்பியை கைது செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் துறவியர் பேரவை சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
மதுரையில் இந்து துறவி பேரவையினர் வெங்கடேசன் எம்பியை, கைது செய்யக்கோரி மனு கொடுத்தனர்.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பின்போது தமிழகத்தை சேர்ந்த ஆதீனங்கள் வழங்கிய செங்கோல் நிறுவப்பட்டது. மேலும் சமீபத்தில் ௧௮ வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற பின் நடைபெற்ற முதல் கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்ற வந்த போதும் அவருக்கு செங்கோல் அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில், மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், செங்கோலை பற்றியும் ,மதுரை மீனாட்சி அம்மன் பற்றியும் அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு துறவியர் பேரவை புகார் அடங்கிய மனுவை, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது. மேலும், தபால் மூலம் தமிழக ஆளுநர், ஆர்.என்.ரவி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும் தபால் மூலம் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாம்.
துறவியர் பேரவை வழங்கிய மனுவில் மதுரை எம் .பி. சு. வெங்கடேசன் செங்கோல் பற்றியும், மதுரை மீனாட்சி அம்மன் பற்றியும் நாடாளு மன்றத்தில் தவறாக பேசியதாகவும், அவர் விதியை மீறியதாக, அவர் எம்பி பதவியை ரத்து செய்ய வேண்டும், அவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என, பேரவை நிர்வாகிகள் மாநில அமைப்பாளர் சுடலை ஆனந்தன், தலைமையில் நிர்வாகிகள், மதுரை மாவட்ட ஆட்சியிடம் மனு கொடுத்தனர்.