மதுரையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து: ஆட்சியர் அறிவிப்பு
உருமாறிய கொரோனா ஓமைக்ரான் நோய் பரவலைக் கருத்தில் கொண்டும் பொதுமக்கள் நலன் கருதியும் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா ஓமைக்ரான் வைரஸ் நோய் பரவலைக் கருத்தில் கொண்டும் மற்றும் பொதுமக்கள் நலன் கருதியும், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமைதோறும், நடைப்பெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஸ்சேகர் அறிவித்துள்ளார்.